🌿ஒரு அழகிய காலம். 🌿
சின்ன சின்ன சந்தோஷங்கள், அம்மா அப்பா அருகில், என் உலகம் பாதுகாப்பாக உணர்ந்தேன்.அது ஒரு அழகிய காலம்🌿♥️
ஸ்கூல் பஸ் வரும் சத்தம் கேட்டாலே காலை பறக்க பறக்க தயாரானோம்.ஜன்னல் சீட் கிடைக்கணும் என்று சின்ன போட்டி போட்டோம்.அது ஒரு அழகிய காலம்♥️🌿
அம்மாவின் புடவையை ரகசியமாய் உடுத்திப் பார்ப்பதில் தனி சுகம்-அது ஒரு அழகிய காலம்♥️🌿
அப்பாவுக்கு தெரியாமல் படம் போனது — அது ஒரு அழகிய காலம்♥️🌿
காதலித்த நினைவுகள் சில, இனிமையாய் இருந்தாலும் இன்றோ வலியாகவே நிற்கின்றன.-அது ஒரு அழகிய காலம்♥️🌿
தாத்தா, பாட்டி கொடுதா காசை சேர்ந்து மொத்தமா பரப்பி எண்ணிப் பார்க்கும் பொழுது. சின்ன சின்ன காசுகளும் ரொம்ப பெரிய செல்வமாய் தோன்றியது.✨அது ஒரு அழகிய காலம்♥️🌿
வைவா வரும் போது வார்த்தைகள் மறந்து போவது
நண்பர்களோடு சின்ன சிரிப்பு, ஜோக்குகள், மெம்ஸ்
கல்லூரி டிரிப் மென்மையான நினைவுகள், சிரிப்பும் கலந்த ஒரு பொக்கிஷம் ❤️-அது ஒரு அழகிய காலம்♥️🌿
ஹாஸ்டல் வாழ்க்கை சிரிப்பு, சோகம் கலந்து
வார இறுதி என்றாலே கண்களில் காத்திருப்பு,
அம்மா அப்பா வருவாங்களா எண்ரு🫂♥️🌿
அக்காவுடன் பகிர்ந்த அந்த இரவு படம் பார்த்த சந்தோஷம் மட்டும் அல்ல பாசத்தின் தருணமாய் மனதில் நிற்கிறது-அது ஒரு அழகிய காலம்♥️🌿
கடந்த நாள் நினைவுகள்,மெல்ல நினைவில் நுழையும்.சின்ன தருணங்கள், மனதை நெகிழச்சிக்க செய்யும்❣️-அது ஒரு அழகிய காலம்♥️🌿
♥️🌿
Yashna Sri