Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 26 💫  (Read 14535 times)

Thamizhini Chat

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 78
  • Achieve +25/-2
  • HuSkY
    • View Profile
    • Thamizhini Fm
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 26 💫
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 26 💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team

Adithya

  • Newbie
  • *
  • Posts: 25
  • Achieve +3/-0
  • ☬🍫ChoCoLaTe BoY🍫☬
    • View Profile
சூரியன் மிதக்கும் உந்தன் அருகில்,
உலகின் அனைத்தும் மௌனமாகும் போதும்,
நம் கண்ணில் அது ஒரு சுகமான காட்சி,
ஒரு இனிய தருணம், அதில் காதல் அடைந்தது.
கடலின் பக்கம் நீராடும் நதிகள் போல,
உன் அருகில் நான் மகிழும் திசைகள்,
முகமூடி மாறும் பார்வைகள்,
உன்னுடன் நான் நிமிர்ந்திடும் போது.
உன்னோடு இவ்வாறு நொடி நொடியாய்,
எதையும் பேசாமலும் அமைதி கொஞ்சும்,
இடம் பெறும் இந்த பரபரப்பு நேரம்,
உன் நகைக்கும் ஒளியில் ஒரு காதல் உயிர்.
முடியும் என தெரியாத நிழல்கள் உண்டாக,
காணாத நதி வழி கண்டோம், நம் காதலில்.


-Adithya
AdiThYa

Aadhiran

  • Newbie
  • *
  • Posts: 7
  • Achieve +0/-0
    • View Profile
கண் இமைக்கும் நொடியில்
உன்னை காண முடியாது
இன்று உன்னை பார்க்க  நினைத்தாலும்
அது என்றோ
ஒரு நாள் தான் நடக்க கூடும்
கடவுளிடம் கேட்கதா வரம் நீ.....
உன்னிடம் பேசு தருணங்கனை விட
நினைத்துக்கொண்டிருக்கும்
நினைவுகள் தான் அதிகம்
பலருக்கு நீ பொய்யாய்
எனக்கு மட்டும் மெய்யாய்
             நிரந்தரமாய்❤️...............
               Thanks you all happy chating
-Aadhiran.........

ArVinD

  • Newbie
  • *
  • Posts: 7
  • Achieve +0/-0
    • View Profile
💞நீ என் கனவின் நிலா, நான் உன் இரவின் நட்சத்திரம்,💞
❣️உன் அருகில் என் உலகம் ஒளிரும் தற்காலம்.❣️
♥️உன் குரல் கேட்டால் இதயம் பாட்டு பாடும்,♥️
💝உன் நினைவுகள் என் உயிருக்கு சுகம் தரும்.💝

உன் பார்வை எனது மனதை கவரும்,
உன் சிரிப்பு என் இதயத்தை நன்றிக்கட்டும்.
உன் அருகில் ஒவ்வொரு நிமிடம் சுகமான கனவு,
உன்னோடு நான் வாழ்ந்தால் உலகம் இனிமை தரும்.

Azhagan

  • Newbie
  • *
  • Posts: 3
  • Achieve +0/-0
    • View Profile
Re: ✨நிழல்உயிர்ஆகிறதுSeason 26
« Reply #4 on: April 04, 2026, 03:54:16 pm »
மாலை வெயில் அவள் மேல் பட்டது,
மலையே அவள் அழகில் மயங்கி நின்றது.

பொன்னிற ஒளியில் அவள் கூந்தல் மிளிர்ந்தது,
பூவும் வெட்கி தலை குனிந்து நின்றது.

சூரியன் கதிர்கள் அவள் கன்னம் தொட்டது,
சுடர் விட்டு அவள் முகம் இன்னும் மலர்ந்தது. ☀️

மேகங்கள் அவளை சுற்றி வளைந்தது,
மேனி முழுதும் வெண்ணிலா பூசிக்கொண்டது. ☁️

காற்று அவள் இதழில் முத்தமிட்டது,
கடலும் அவள் கண்களில் ஆழம் தேடியது.

நிலவும் அவள் நகைப்பை கண்டு வெட்கியது,
நட்சத்திரங்கள் அவள் விழியில் ஒளி தேடியது. ✨

வானவில்லும் அவள் நிறம் கண்டு மலர்ந்தது,
வையகமே அவள் அழகில் தொலைந்தது

மலையுச்சியில் அவளை பார்த்திருந்தேன்,
மாலை வானமே அவளுக்காய் சிவந்தது என்றேன். ❤️
« Last Edit: April 04, 2026, 05:40:12 pm by Azhagan »

Keerthana

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +0/-0
    • View Profile
              நீ என் அருகில் இல்லாத நேரங்களிலும் 🤍
              உன் இருப்பை உணர வைக்கும் ஒன்று —
              என் நிழல்… 🌙
              ஒளி பட்டால் தான் நிழல் வரும்...... ☀️
              ஆனா நீ வந்த பிறகு
              இருளிலும் கூட அது உயிரோடு நடந்தது… 🌌✨
              என் ஒவ்வொரு அடியிலும் ....👣
              உன் பெயர் ஒலிக்கிறது .....🔊❤️
              அந்த ஒலியை பிடித்து
              என் நிழல் காதலாக மாறுகிறது… 💞
              நான் பேசாமல் இருந்தாலும் .......🤫
              என் நிழல் உன்னிடம் பேசுகிறது.....🫶
             “அவள் தான் என் உலகம்” என்று 🌍❤️
               அது தினமும் சொல்லிக்கொண்டே இருக்கிறது…
               நீ சிரிக்கும் நேரத்தில் 😊
               என் நிழல் கூட மகிழ்கிறது 💫
               நீ தூரமாகும் பொழுதோ 😔
               அது கூட சோகத்தில் கரைகிறது… 💔
               ஒரு நாள் ஒளி மறைந்தாலும் 🌑
               நிழல் இல்லாமல் போகலாம்…
               ஆனால் உன் காதல் இருந்தால் 💖
               என் நிழல் என்றும் உயிராகவே இருக்கும்…
               ஏனெனில்—
               நீயே என் ஒளி… ✨
                நான் உன் நிழல்… 🌙
                அதனால் தான் நிழல் உயிராகிறது… ❤️🔥

Ragul

  • Newbie
  • *
  • Posts: 1
  • Achieve +0/-0
    • View Profile
உன் அன்பு என் உயிர் நீ
உன் நினைவு என் மூச்சு நீ
நம் காதல் என்றும் மலர்க
நான் உன்னை நேசிக்கிறேன்

நெஞ்சம் நொந்தாலும் நீ இருக்கும்
உன் வார்த்தை எனை ஆற வைக்கும்
காதல் எனது வாழ்வின் நூல்
நம் கதை என்றும் சிறக்கட்டும்

உன் கண்களில் நான் மாயம்
உன் புன்னகையில் நான் வாழ்வு
நம் காதல் ஒரு இசைபாடல்
என்றும் மனதோடு இசைக்கும்

நீ இல்லாமல் என்னோடு நான்
ஒரு கண்ணீர் போல தனிமை
உன் அன்பே என் துயரம் தீர்க்கும்
நான் உன் கை பிடிக்கிறேன்

Kalai

  • Newbie
  • *
  • Posts: 3
  • Achieve +0/-0
    • View Profile
குடும்பத்துடன் இணைந்து கொண்டாடும் தீபாவளி, வாழ்வின் அழகான மற்றும் சிறப்பான தருணம். ஒவ்வொரு தீபமும் ஒவ்வொரு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டி, ஒளியூட்டும் நினைவுகளைப் பிரதிபலிக்கிறது. உறவுகளின் ஒளியால் எங்கள் மனதில் நிறைவான மகிழ்ச்சி பரவ, ஒவ்வொரு நிமிஷமும் பகிர்ந்து கொண்ட சிரிப்புகள் நம்மை இணைக்கும் உறவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு இனிய தீபாவளியாக அமைவதாக வாழ்த்துகிறேன்!