Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 19💫  (Read 391 times)

Attitude QueeN

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 34
  • Achieve +21/-0
  • QueeN PreeThi
    • View Profile
    • Thamizhini Fm
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 19💫
✨💐Nizhal🌹Uire🌹Aagirathu💐Season 19💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
« Last Edit: December 01, 2024, 01:01:41 pm by RuDra »

Billa

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +2/-0
    • View Profile
😥 என் இதயத்தை உடைத்தவளுக்கு 😥

😥 தனிமை எனும் பெருங்கடலில் ஆழ்ந்திருந்த பொழுது 😥

😥 என் தனிமையை போக்க வந்த தேவதையே 😥

😥 உடன் இருந்த அந்த மூன்று ஆண்டுகள் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது 😥

😥 உன்னுடன் இருந்த அந்த நாட்களில் தனிமை என்றால் என்ன என்று நான் கேட்டேன் என் வாழ்வில் 😥

😥 எல்லாம் சில காலம் இருந்தது 😥

😥 அவள் என்னை மட்டும் விட்டு போயிருந்தாள் என்றோ மறந்திருப்பேன் 😥

😥 ஆனால் அவள் மனது என்னிடம் விட்டுவிட்டு 😥

😥 இந்த உலகத்தை விட்டு போய்விட்டாள்
😥
அடுத்த சில நாட்களில் மீண்டும் நான் தனிமையில் தள்ளப்பட்டேன் 😥
😥 அன்று தான் முதல் முதலில் மதுவை தொட்டேன் அவளை நினைவால் 😥

😥 சில நாட்கள் அப்படியே போனது ஆனாலும் அவர்கள் நினைவு மட்டும் என்னிடம் இருந்து போகவில்லை 😥

😥 மூன்றாண்டுகளாகிவிட்டது ஆனால் அவரை மறக்க இயலவில்லை இனி என்னால் வாழ்நாள் மறக்கவும் முடியாது😥

😥 இந்த கவிதை போட்டிக்கு வைத்த புகைப்படத்தை பார்த்தவுடன் அவள் நியாபகம் தான் வந்தது 😥

😥 இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவளை மறக்க இயலாது 😥



   😥 அவளின் நினைவுகளுடன் அவளின்  KOLARU  உங்கள் Billa  😥

MurattuKaalai

  • Newbie
  • *
  • Posts: 7
  • Achieve +3/-0
    • View Profile
💔உயிருக்கும் மேலாக நேசித்து விலகிய வலிகள் நிறைந்த காதல் 💔


 💔 பணி கூட சுமையில்லை
ஆனால் பனியும் சுடுகிறது..
💔 உன்னாலே உன்னாலே💔

💔உடலுக்கு உயிர் கூட சுமைதான் நான் உயிராக நினைக்கும் என் உயிர் என்னை மறந்து போகும் எனில்..
💔உன்னாலே உன்னாலே  💔

💔அனைவரும் அருகில் இருந்தும் அனாதைபோல் உணர வைக்கின்றது..
💔 உன்னாலே உன்னாலே💔

💔 மறக்க நினைக்கிறேன் உன்னோடு பேசிய அந்த நாட்களை
💔 உன்னாலே உன்னாலே💔

💔 நான் உனைக்காணும் போதெல்லாம்
நனைந்து விடுகிறேன் கண்ணீரால்
 💔 உன்னாலே உன்னாலே💔

 💔உன்னை நினைக்கும் போது கவிதை வருகிறது
💔 உன்னாலே உன்னாலே 💔

💔 வேதனை தாளாத இரவுகள்
நமக்கான நாட்கள் ஏன் உதிக்கவில்லை
💔 உன்னாலே உன்னாலே 💔

💔 இதயத்தில் இடம் தந்தும்
உன் அருகே எனக்கோர் இடமில்லை
💔 உன்னாலே உன்னாலே 💔

Urs Rocket 🚀  & MK
« Last Edit: December 01, 2024, 04:34:50 pm by MurattuKaalai »

NaYanThaRa

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +3/-0
  • ✨✨ 👑 WTC Queen 👑 ✨✨
    • View Profile
என் அன்பு மனிதனே உன் உடைந்த இதயம் பேசுகிறேன் கேள்💔

நீ நினைக்கிறாய் காதல் மட்டும் நான் உடைய காரணம் என்று ஆனால் இல்லை

சிறு வயதில் ஆசைப்பட்ட பொம்மை கிடைக்காமல் முதன் முதலில் உடைந்தேன் 💔

பள்ளி பருவத்தில் அதிக மதிப்பெண் பெற்ற நண்பனை பார்த்து சற்று பொறாமையில் உடைந்தேன் 💔

கல்லூரி நாட்களில் உன் மனம் கவர்ந்தவன் உன்னை தள்ளி வைக்கும் போது உடைந்தேன் 💔

அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை விட்டாயா

ஒருவன் விரித்த காதல் வலையில் மட்டினாய் நீ உண்மையாக இருந்தும் உன்னை அவன் பார்த்த ஒரு சந்தேக பார்வையில் மொத்தமாக நொறுங்கி போனேன் 💔

அறிவற்ற மனிதனே நான் உடைய மற்றவர்கள் காரணம் என்று நீ கூறும் போது புன்னகை தன் வருகிறது

ஆரிய பருவத்தில் வயதுக்கு மீறி ஆசை பட்டது நீ
முயற்சி செய்யாமல் மதிப்பெண் எதிர்பார்த்தது நீ
கிடைக்காத அன்புக்கு ஏங்கியது நீ
அருகதை அற்றவன் மீது அன்பு கட்டியதும் நீ

அனைத்தும் நீ செய்து விட்டு மற்றவர்களை குறை கூறுவதும் நீ நன்றாக சிந்தித்து பார் மடமை உனக்கே புரியும் , ஆனால் அப்போதும் உன் மடமையை நினைத்து உடைவது 💔 நான் தான் 😂

என்றும் அன்புடன் 💕 இன்று உங்கள் இத்தயமாய்💔
ரம்யா

WTC MAMAKUTTY

  • Newbie
  • *
  • Posts: 3
  • Achieve +2/-0
    • View Profile
எதையும் தாங்கும் இதயமானது.....
எண்ணற்ற ஏமாற்றங்களால்....
உடைந்த இதயம் ஒட்டாது என்பர்...
நான் உடையும் ஒவ்வொரு முறையும்
இதயத்தை இயக்க வைக்கும் இறை
என்னை ஈன்றவளே....
பிடித்த பொருள் வேண்டும் என்று துடித்த
என் இதயம்
அம்மா அடித்த போது அழுதேன்....
அந்த அடியின் அர்த்தம் அனாவசியமாக ஆசையிடாதே...
ஒரு தலை காதலை உலற நினைத்தேன் அவளிடம்
அவ்ளோ நண்பனை நேசித்தாள்...
நெஞ்சம் உடைந்தேன்...
பிடித்த படிப்பை தேடி சென்றேன்
தேர்ச்சி மதிப்பெண் தேரவில்லை என்று தேய்ந்து போன இதயம்
தேடி தேடி சேர்த்த திரவியத்தை தெரியா ஒருவரிடம்
தொலைந்து தெருவில் நின்ற போது முற்றிலும் உடைந்தேன்...
இருந்தும் வாழ்கிறேன் என் ஈன்றவளின் பேரன்பினால்...

இதயம் உடையும் வலி கேட்டேன் இதயா இதயா எதிர்ப்பார்த்தேன்....... பிடித்த வரிகள்... நண்பன் திரைப்படம்


உடைந்த இதயத்தை தைத்து ஓயாமல் ஓடும் உங்கள் நண்பர்
Joseph VJ என்னும் WTC MaMaKuttY 🤗☺️🫣🥰


jeni

  • Newbie
  • *
  • Posts: 5
  • Achieve +2/-0
    • View Profile
அவளின் அவன் 💕

தன்னை மட்டும் நேசித்து வாழ்ந்த அவள் ....

தன்னை விட ஒருவனை நேசிக்க மனம் வந்ததோ!!

அன்பில் அவனுக்கு அடிமையாக மாறி போனாலோ...

அவளுக்குடையவன் இல்லை என தெரிந்தும்

அவனுக்காக கனா கண்டு காத்திருந்தாளோ✨💕

எத்துனை ஆண் மகன்கள் கண்டும்
அவனை கண்ட நொடி மறையவில்லையோ✨💕

யாருக்கும் கொடுக்காத தன் இதயத்தை அவனுக்கு கொடுத்தாலோ...


பத்திரமாக பார்த்துகொள்  என்றல்லவா கூறினாள் ...

ஆனால் அவனோ சற்றும் சிந்திக்காமல்...
உடைத்து விட்டானோ💔💔


உடைந்தது கூட பரவாயில்லை ...

சுக்கு நூறாக உடைந்ததோ...
சற்று திரும்பி பார் ...

நீ உடைத்து எரிந்ததை

ஒட்ட வைக்க முயற்சித்து

நின்று கொண்டு இருக்கிறால் ....

நீ விட்டு சென்ற இடத்தில்... ✨💐

அவள் இன்றும் அவனின் அவளாக காண்கிறாளோ...

தொடரும் அவள் கனா...💕💕✨✨✨✨

Khaliq1428

  • Newbie
  • *
  • Posts: 1
  • Achieve +1/-0
    • View Profile
காதல் காற்றே…

மெல்லமாய் வந்தாய்🥰
மனநிறைவை கொடுத்தாய் - தேவதை
என்னும் மலரையும் கொடுத்தாய்😍
...
நானும் என்னவளும்....
பறவையாய் பறந்தோம்
மனதோடு மனம் கலந்தோம்
காதலில் விழுந்தோம்
மகிழ்ச்சியாய் இருந்தோம்
காலத்தை கடந்தோம்🤍
...
வரும் காலத்தில் நீ எனக்கு
மெல்லிசையாய் வருவாயோ!!
தென்றலாய் வருவாயோ!!
என எதிர்பார்த்தேன்
ஆனால் நீயோ……
புயலாய் வந்தாய்😞
இதயத்தை நொறுக்கினாய்🤕
கண்ணில் கண்ணீரும் நிரப்பினாய்🥺
அழுகையும் வர செய்தாய்😫
...
ஏன்? ஏனடி இவ்வாரு செய்தாய்....
என்னவானதோ என்னவளுக்கு....!!
மகிழ்ச்சி அளித்தவள் - மாயமாக சென்றாள்
சிரிக்க வைத்தவள் - சிதறி சென்றாள்
கைகோர்த்து நடந்தவள் - என் காலத்தைவிட்டே
சென்றாள்.......!!!😞
.
இதயத்தை நொறுக்கிய அவளின் முகத்தை🧚
மறந்து போக மனம் மறுக்கிறது...
காரணம் - இன்னும் அவள் என்னுடன் இருக்கும்
என்னவளே.........."

- காளிக்🤍



Vaishnavi

  • Newbie
  • *
  • Posts: 5
  • Achieve +0/-0
    • View Profile
Uyir kadhlane.........✨

     Unai pathu pesiya muthal nale ennul etho oru unarvu.....✨
Natpudan thodangiya nam santhipu kadhlaga mariyathu .......✨
Unaku pedithathu pedikathathu ena anaithum arinthu atharketrarpol nadanthu kondu.... Un ovvoru asaivayum Anu Anuvai rasithu magizhtha antha natkal💖 ennalum maravathu kadhalane....

Unidam kadhalai koori nam  kadhalai parimari konda tharunam en idhyathil inam puriyatha magizhchi latcham ✨✨kodigal alla ennil adangatha ennikaiyil pattamboochigal idhyathil siragadithu paranthathu....✨✨💖

  Inaiyam enaku thantha kadhal parisu ne 💖🎁💝unai en kannukul vaithu kadhalithen....
Un pechu...un kuruncheithigal ....un kural....un moochu ....un oodal ...un kurumbugal...nam ita sandaigal...💖maraka mudiyatha ninaivugalai en manathil odi kondiruka .....angu un manathil innoruval 🥺...
   Ne pengalidam pesuvathai kandu na pala murai poramai patalum ne ennavan enai vitu sellamatai endru ninaithu kondiruthen anaithaiyum poi aki vitayada😖🥺
 Aam nenda natkaluku piragu arinthen 😖Avan manathil en idathil innoruval ullathai🥺 manam nonthu sandaiyiten avanidam 😖anal avanuko en manam puriyavilai en ulagam endru irunthavan ipozhuthu veru oruthiyudan😒.....

Inaiyathilavathu Avana idhyathai sonthamaga keten koduthu 🥺😖thirumba petrukondu 😖 veru oruvalidam thanthu vitan 😒💔...
   En manathil million kanakil osigal nuzhaithathu pol irunthathu 🥺 Thoongamal iravu muzhuvathum pesiya azhaguya tharunangal 😔kan mun vanthu selgirathu... Anal avano avaludam magizhchiyaga 🥺....

Pala natkal sandaiyitu..... kobapattu....azhugayum ....kannnerumai.... Azhagana natpugalaiyum ilanthu 😔🥺Kainthu pona malarai pola idhayam nonthu vitenada ....💔

Ne avaludan ullam magizhnthu irukum antha tharunangalil...... Un ninaivugaludan..kannerudan...un kurunjeithigalai paditha vannam nan 💔🥺....yosithu parthal unaku veru pen pedithirukirathu endru arintha pozhuthe na vilagi senriruka vendum 🥺💔kadhalin mayakathil ithanai nal unidam sandaiyitu kayapaduthiyatharku manithubidu kadhalane 🥺😔
 Silarin varthaigalum parvaigalum  un nenaivugalai en manathil  etho oru mozhaiyil irunthu 😔thondi edupathu pondru irukum 💔...

Meenin varugaikaga 🐟palamanineram kathirukum 🦩kokku pola un azhaipirkaga kathu kathu nindru ematrame micham 😔...
Ne avaludan irupai endru arinthum varuvai varuvai ena 🥲engum manathirku ipozhuthu than purinthathu ne epozhuthum varamatai endru😔🥲....

Epadiku endrum un nenaivugalai sumakum udaintha kannadiyai nan✨✨✨🫰

Nayagan

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +0/-0
    • View Profile
என்றும்  என் இதயத்தில்
குடி கொண்டு இருக்கும் .....என்னவளே
 
எவராலும் நுழைய முடியாத
இரும்பு அரண் கொண்ட
இதயத்தை துளையிட்டு நுழைந்தாய்....

எதற்கும் பயனில்லாத என் இதயத்தை
உன் அன்பிற்காக
துடிக்கச்செய்தாய் .....

உன்  நினைவுகள் சூழ்ந்த
என் இதயத்தை
உடைத்து சென்றுவிட்டாய்
என்னை மறந்துவிடு என்று...

தேடி வந்து தேட வைத்து 
இன்று உன் நினைவுகளில்
வாழ வைத்து சென்றுவிட்டாய்....

என் இதயம் இயங்குவதே
உன் நினைவின் சுமையால்தான் ...
உன் நினைவுகளில் மட்டும்  வாழூம்
உன்னை எப்படி மறவேன்.....


மறந்து விடுகிறேன் நான் மண்ணில்  மறைந்த பிறகு.......