என் அன்பு மனிதனே உன் உடைந்த இதயம் பேசுகிறேன் கேள்💔
நீ நினைக்கிறாய் காதல் மட்டும் நான் உடைய காரணம் என்று ஆனால் இல்லை
சிறு வயதில் ஆசைப்பட்ட பொம்மை கிடைக்காமல் முதன் முதலில் உடைந்தேன் 💔
பள்ளி பருவத்தில் அதிக மதிப்பெண் பெற்ற நண்பனை பார்த்து சற்று பொறாமையில் உடைந்தேன் 💔
கல்லூரி நாட்களில் உன் மனம் கவர்ந்தவன் உன்னை தள்ளி வைக்கும் போது உடைந்தேன் 💔
அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை விட்டாயா
ஒருவன் விரித்த காதல் வலையில் மட்டினாய் நீ உண்மையாக இருந்தும் உன்னை அவன் பார்த்த ஒரு சந்தேக பார்வையில் மொத்தமாக நொறுங்கி போனேன் 💔
அறிவற்ற மனிதனே நான் உடைய மற்றவர்கள் காரணம் என்று நீ கூறும் போது புன்னகை தன் வருகிறது
ஆரிய பருவத்தில் வயதுக்கு மீறி ஆசை பட்டது நீ
முயற்சி செய்யாமல் மதிப்பெண் எதிர்பார்த்தது நீ
கிடைக்காத அன்புக்கு ஏங்கியது நீ
அருகதை அற்றவன் மீது அன்பு கட்டியதும் நீ
அனைத்தும் நீ செய்து விட்டு மற்றவர்களை குறை கூறுவதும் நீ நன்றாக சிந்தித்து பார் மடமை உனக்கே புரியும் , ஆனால் அப்போதும் உன் மடமையை நினைத்து உடைவது 💔 நான் தான் 😂
என்றும் அன்புடன் 💕 இன்று உங்கள் இத்தயமாய்💔
ரம்யா