Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 21💫  (Read 116 times)

Attitude QueeN

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 36
  • Achieve +21/-0
  • QueeN PreeThi
    • View Profile
    • Thamizhini Fm
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 21 பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி 💫
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 21 Pongal special kavithai program💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
« Last Edit: January 03, 2025, 11:19:49 am by Attitude QueeN »

NaYanThaRa

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +3/-0
  • ✨✨ 👑 WTC Queen 👑 ✨✨
    • View Profile
கடவுள்களுக்கு கொண்டாடும் திருவிழாகளுக்கு மத்தியில் மனிதனின் உளவுக்கு துணை புரியும்  அனைத்துக்கும் நன்றி சொல்லும் ஒரே ஒரு திருவிழா தமிழர் பெருவிழா தை திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

ஊரெங்கு தயாராகும் விடுகள் பரபரப்பாகும்
பழைய பொருட்கள் தீக்கு போகும் புதிய பொருட்கள் வீட்டை அலங்காரிக்கும்

பழையன கழிந்து புதியன வீடு புகும் போகி திருநாள்

காலை ஏழுந்ததும் வண்ண வண்ண கோலங்களுக்கு மத்தியில் கரும்பு மஞ்சள் தோரணங்களுக்கு இடையில் புது பானை சிரிக்கும்

தித்திக்கும் கரும்பாய் என் அன்னையின் அன்பால் செய்து கொடுக்கும் அந்த பொங்கல் அந்த சூரியனுக்கும் அமிர்தமே

மனிதனுக்கு துணை நிற்கும் ஆடு மாடு ஆகிய உயிரினங்களுக்கு நன்றி சொல்லி வணங்கி மாட்டு பொங்கல் படைப்போம்

இறுதியாக உழவர் திருநாள் இதுவே நம் பண்பாடு முதலில் சூரியன் அடுத்து உதவியவர் இறுதியாகவே நாம்.

❤️❤️❤️❤️❤️

செஞ்சுடறாய் எரிக்கின்ற தீயில் தீமை எரிய

தங்க கரம் கொண்டு நன்மை வரவேற்று போகி கொண்டாடுவோம்

செஞ்சுரியனுக்கு வென்னிற பொங்கலிட்டு தித்திக்கும் கரும்பாய் அன்பு கொண்டு

மஞ்சளின் மங்களதுடன் அனைவரும் இருக்க அந்த இறைவனை வேண்டி தை திருநாளை புத்தண்டாய் வரவேற்போம்

அன்பில் மனிதனை மிஞ்சும் உயிர் உழைப்பிலும் ஈகைலும் இணையாற்ற உயிர்

இளம் காளை போல் துள்ளி விளையாடி மாட்டு பொங்கல் திருநாளில் நன்றி சொல்வோம்

உன்ன உணவு தந்து இன்னும் உணவின்றி உழைக்கும் விவசாய பெரும்குடி என் மனித கடவுள்களுக்கு கை கூப்பி 🙏 நன்றி சொல்வோம்

இனியாவது நன்மை பிறக்கும் என்ற நம்பிக்கையில்  வருகின்ற புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம்

அனைவர்க்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் ❤️
ரம்யா
« Last Edit: January 04, 2025, 03:38:03 am by NaYanThaRa »

MurattuKaalai

  • Newbie
  • *
  • Posts: 7
  • Achieve +3/-0
    • View Profile
பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை  பெயர் மட்டும் மாறலாம் உலகலாவில் அனைவராலும் கொண்டபாடும் ஒரு இயற்கைக்கு நன்றி சொல்லும் ஒரு தமிழர் பண்டிகை

பொங்கல் உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது ,பொங்கல் ஒரு நாள் பண்டிகை அல்ல ஒரு வாரம் பண்டிகை

முடிந்தவை முடிந்தவையாகவே இருக்க  போகி பண்டிகை அன்று தீயவை,இருள்,பொய், அகல இவைகலை எரித்து கொண்டபாடும் போகி,

சூரியனுக்கு நன்றி சொல்ல சூரிய பொங்கல் அன்று மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா,


உழவுக்கு நன்றி சொல்ல மாட்டு பொங்கல்,
மாட்டை அலங்காரம் செய்து மஞ்சள் வவிரட்டு கொண்டபாடும், இது தமிழரின் வீர விளையாட்டு.


பொங்கல் என்றாலே கொண்டாட்டம்குதூகலம் தான் ஒரு கிராமமே  ஒன்று கூடி உரி , ஜல்லிக்கட்டு, கபாடி,என கொண்டடுவோம், இன்றும் பலர் பொங்கல்  மட்டும் கூட்டு குடும்பம் ஆக இருபத்தாக உணருகிறோம் இது காணும் பொங்கல்

பொங்கலோ பொங்கல் என்று இனிவரும் திங்கள் எல்லாம் உழைக்க  னைவரும் ஒன்று கூடி கரி அடுப்பில் ஏற்றிய பானை,பொங்கிடப், "பொங்கலோ, பொங்கலென்று சொல்வோம் பொங்கலோ பொங்கல் தைப் பொங்கல்


தை-யிலே பிறக்கும் கை நம்பிகை

NaN Ungal MurrattuKaalai ❤️ RockeT Raja
« Last Edit: January 04, 2025, 12:33:43 pm by MurattuKaalai »

YuGi

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +1/-0
    • View Profile
பொங்கல் பண்டிகை வரும் நேரம்,
படலாக எங்கள் வாழ்வில் பெருக்கம்.
சூரியன் தன் வெப்பத்தை உந்தி,
விடியலாய் கொள்கிறது நம்மை நல்வாழ்த்தி.

சர்க்கரை பொங்கல், அரிசி மிட்டாய்,
பஞ்சபூதம் கலந்து உண்டோம் இணைந்து.
மலர்ந்த மண் வாசம் நமக்கு அழகு,
பிறந்த பூமி வழியில் இன்பம் பரப்பு.

பொங்கல் இனியும் ஒரு வாழ்த்து,
நம் வாழ்வு தொடர்ந்திடும் உறுதி.
எல்லா வளங்களும் வந்திட வாழ்த்துக்கள்,
பொங்கலோ புகழ்வோ! நமது மேல் ஆசிகள்



SRT

  • Newbie
  • *
  • Posts: 1
  • Achieve +0/-0
    • View Profile
பழமைதனை தீயிலிட்டு புதுமைதனை வரவேற்கும்
எரிநாளாம்....🔥

பருவ பெண்ணை போல வளைந்து நெளிந்து வளர்ந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் அறுவடைத்திருநாளாம்.....🌾

நெற்மணிகளை பானையிலிட்டு அக்கண்ணியின்
கோபம் எனும் தீயிலிட்டு
அன்பு எனும் பாலிட்டு
அவள் குரல் எனும் இனிமை (இனிப்பு)சேர்த்து
மகிழ்ச்சி பொங்கி வர
பொங்கல் இடும் பொன்நாளாம்.....🧉

உலக உயிர்களின் பசிப்பிணியை போக்கும் உழவர்தம் உழவியலையும்  வாழ்வியலையும் கொண்டாடும் உழவுத்திருநாளாம்....🌾

உழவுக்கு உறுதுணை செய்த உயிர்களையும், இயற்கையையும் போற்றும் இயற்கை பெருநாளாம்....🌿🌿🌱🌼

தமிழ்மறவர் தம் வாழ்வியலையும் விருந்தோம்பலையும் வீரத்தை வெளிக்கொணரும் தமிழர்த்திருநாளாம்.....✊

காலை கதிரவனின் ஒளிக்கற்றை போல தைத்திங்கள் பிறந்தால் வாழ்வில் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கீற்றை தரும் தைத்திருநாளாம்........✨⚡

உழவர்தம் தோள்முறுக்கி காளை திமில் அடக்கி தம் வலிமையையும் வீரத்தையும் உலகிற்கு பறைசாற்றும் வீரத்திருநாளாம்.......🐂🐮💪

சுற்றம் தழுவி  நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும் நன்னாள் இது பொன்நாளாள்.....👨‍👩‍👧‍👦🫂

வையகத்து உயிர்கள் வாழ்வாங்கு வாழ உழவையும் உழவர்களையும் போற்றவோம்...... 🌿🌾🐂🌱

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...😊👍
                          - 📝-   தமிழ் ❤️




Nayagan

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +0/-0
    • View Profile

உலககெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு
எனது பொங்கல் தின வாழ்த்துமடல்....

நாம் இயங்கவும் இந்த அண்டம் 
சீராக   இயங்க துணைபுரியும் கதிராவனக்கும்
நாம் சோற்றில் கால் வைக்க
சேற்றில் பாடுபடும் விவாசிகளுக்கும்
நாம்  செலுத்தும்  நன்றிக்கடனான தை திருநாள் அன்று ....
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப  புத்தாடையுடன் புத்துணர்ச்சியாக
புதிய  வாழ்க்கையை
தன்னம்பிக்கையுடன் தொடங்கி  வெற்றியடைய...
உலையில் பொங்கிய நூரையென 
உன் வாழ்வில் சந்தோசம் பொங்கி வழிய...
தித்திக்கும் கரும்புடேன்
உன் வாழ்வில்  இனிமை பெருகிட....
பழையன கழிந்தும் புதியன புகுதலும் போல
உன் மனதில் உள்ள அழுக்குகள்
போகி தீயில் போசிங்கிடா...
புதியதொரு தொடக்கமாக 
இந்த பொங்கல் திருநாள் அமைந்திட
அனைவருக்கும் எனது இதயம் கணித பொங்கல் தின வாழ்த்துக்கள்


« Last Edit: January 06, 2025, 06:24:54 pm by Nayagan »

WTC MAMAKUTTY

  • Newbie
  • *
  • Posts: 3
  • Achieve +2/-0
    • View Profile
அக்னி தேவனை வழிப்பட்டு ஆரம்பம் ஆகும்
திருநாளே தைத்திருநாள் - சென்ற வருடம்
பிறந்த மழலைக்கு அன்னம் இடும் அறிய நாள்
அக்னி தேவன் பொங்கல் (சூரிய பொங்கல்)
எல்லா காலத்திலும் காலத்திலும் ஏர் இழுத்து
எருவு கொடுத்து உதவிய எருதுகளுக்கு நன்றி
கூறும் நன்னாளே கணு மாட்டுப் பொங்கல்
காலை முதல் கன்னுக்குட்டி வரை
ஆடு முதல் ஆட்டுக்குட்டி வரை ஆனந்தமாக
குளியல் இட்டு பொட்டு வைத்து புது
ஆபரணங்கள் போல கயிறு கழுத்தில் அணிந்து
கைக்குத்தல் அரிசியில் வைத்த பொங்கலை
அங்கும் பங்காளிகள் உடன் சேர்ந்து ஆனந்தமாய் கோஷம்
போட்டு ஊட்டுவோம் அந்த அழகு ஜீவன்களுக்கு
பொங்கலோ பொங்கல் என்று........
காணும் பொங்கல் அன்று நாங்கள் அனைவரும் காணாமல் போய்
விடுவோம் விளையாட்டை பார்க்க
காலை ஒட்ட பந்தயத்தில் ஆரம்பிக்கும் போட்டி
மாலை கபடியில் முடியும்....
அன்று இரவு நேரத்தில் ஊரில் உள்ள michael jackson களை அடையாளம் காண்போம் 🤗🫣

அனைவருக்கும் பொங்கலோ பொங்கல்.....