Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
அது ஒரு அழகிய காலம்

இந்தப் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது என் சிறு வயது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்ததுதான்.

என்  நண்பர்களுக்கு இந்த கவிதை
நான் சிறு வயதில் உங்களுடன் மகிழ்ச்சியாக இருந்த நிமிடத்தை இன்று வரை என் மனதில் நினைவுகளாக பூட்டி வைத்துள்ளேன் மீண்டும் எப்பொழுது கிடைக்கும் என்று எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன்
ஆனால் அந்த மகிழ்ச்சியான நிமிடங்கள் மீண்டும் கிடைக்காது என்று எனக்கு எப்பொழுது தெரியும் நான் மீண்டும் அனைவரும் நம் சிறுவயதில் இருந்த போது எப்படி ஒன்றாக சுற்றி தெரிந்தோ அதேபோல் சுற்றி தெரிய ஆசைப்படுகிறேன் மீண்டும் கிடைக்குமா அந்த வாய்ப்பு எனது நண்பர்களே

உங்களை பிரிந்து வாடும் உங்கள் நண்பன்
92
🌿ஒரு அழகிய காலம். 🌿

சின்ன சின்ன சந்தோஷங்கள், அம்மா அப்பா அருகில், என் உலகம் பாதுகாப்பாக உணர்ந்தேன்.அது ஒரு அழகிய காலம்🌿♥️

ஸ்கூல் பஸ் வரும் சத்தம் கேட்டாலே காலை பறக்க பறக்க தயாரானோம்.ஜன்னல் சீட் கிடைக்கணும் என்று சின்ன போட்டி போட்டோம்.அது ஒரு அழகிய காலம்♥️🌿

அம்மாவின் புடவையை ரகசியமாய் உடுத்திப் பார்ப்பதில் தனி சுகம்-அது ஒரு அழகிய காலம்♥️🌿

அப்பாவுக்கு தெரியாமல் படம் போனது —  அது ஒரு அழகிய காலம்♥️🌿

காதலித்த நினைவுகள் சில, இனிமையாய் இருந்தாலும் இன்றோ வலியாகவே நிற்கின்றன.-அது ஒரு அழகிய காலம்♥️🌿

தாத்தா, பாட்டி கொடுதா காசை சேர்ந்து மொத்தமா பரப்பி எண்ணிப் பார்க்கும் பொழுது. சின்ன சின்ன காசுகளும் ரொம்ப பெரிய செல்வமாய் தோன்றியது.✨அது ஒரு அழகிய காலம்♥️🌿

வைவா வரும் போது வார்த்தைகள் மறந்து போவது
நண்பர்களோடு சின்ன சிரிப்பு, ஜோக்குகள், மெம்ஸ்
கல்லூரி டிரிப் மென்மையான நினைவுகள், சிரிப்பும் கலந்த ஒரு பொக்கிஷம் ❤️-அது ஒரு அழகிய காலம்♥️🌿

ஹாஸ்டல் வாழ்க்கை  சிரிப்பு, சோகம் கலந்து
வார இறுதி என்றாலே கண்களில் காத்திருப்பு,
அம்மா அப்பா வருவாங்களா  எண்ரு🫂♥️🌿

அக்காவுடன் பகிர்ந்த அந்த இரவு படம் பார்த்த சந்தோஷம் மட்டும் அல்ல பாசத்தின் தருணமாய் மனதில் நிற்கிறது-அது ஒரு அழகிய காலம்♥️🌿

கடந்த நாள் நினைவுகள்,மெல்ல நினைவில் நுழையும்.சின்ன  தருணங்கள், மனதை நெகிழச்சிக்க செய்யும்❣️-அது ஒரு அழகிய காலம்♥️🌿

♥️🌿
Yashna Sri





93
🥰அழகிய சிரிப்பில் அனைவரையும் கவர்ந்து செல்லமாக அழுது மகிழ்ந்த குழந்தை பருவம் அது ஒரு அழகிய காலம்🥰

🤣😭 ஆரவாரதுடன் கிளம்பி கண்ணீருடன் அழுது புரண்டு அம்மாவிடம் அடி வாங்கி பள்ளிக்கு சென்றது அது ஒரு அழகிய காலம்😁

😜சிறு சிறு சண்டை, அளவற்ற மகிழ்ச்சி, எல்லையற்ற கனவு இவற்றுடன் இருந்த பள்ளி நாட்கள் அது ஒரு அழகிய காலம்😍

☺️எத்தனை சண்டை என்றாலும் என் கண்ணீர் துடைக்க வரும் நண்பன் உள்ள ஒரு ஒரு நிமிடமும் அது ஒரு அழகிய காலம்🤩

❤️ கல்லூரி கொடுத்த பரிசு என் வாழ்நாள் துணையாக நினைத்து பகிர்ந்த பாசம் அந்த காதல்  அது ஒரு அழகிய காலம்❤️

💔பிரிவின் வலி உடன் யாரும் வேண்டும் என்று  கேட்காத தனிமையும் அது ஒரு அழகிய காலம்❤️‍🔥

🥹🥰அறியா குழந்தையாய் உள்ளே வந்த என்னை தன் குடும்பம் போல் பார்க்கும் இந்த உறவு ஒரு அழகிய காலம்🤗

💖💝இன்றும் என்றும் நம் நலன் மட்டும் நினைக்கும் பெற்றோர் உடன் இருக்கும் ஒரு ஒரு நொடியும் ஒரு அழகிய காலம்💝💖

By
ரம்யா 💕💕
94
மண்ணில் பிறந்த வட்டக்கரங்கள், மழலை நடையில் பறக்கும் கனவுகள். வட்டமிட்டு ஓடும் சுழற்சியில், சிரிப்புகள் சிந்தும் சூரிய ஒளி.
விசிறி இல்லா காலையின் காற்று, விழிகள் பேசும் உல்லாசக் கதை.

பனிக்காற்றை வென்று பாயும் பாதங்கள்,
விரல்களில் விளையாடும் சுக நிமிஷங்கள். கைபிடி இல்லாத சக்கர வண்டி, ஆனந்தம் கொண்டாடும் சின்ன வயது. நிழலின் கீழ் எழும் சத்தமற்ற சப்தங்கள், நம்மை நாட்களை நோக்கிச் செலுத்தும் சிரிப்பு. 

வானமும் கூட வளைந்து நம் பக்கம்,
மண்ணின் வாசனை மூச்சில் கலக்கும். பாசமுள்ள பார்வைகள் மாறாத சொந்தங்கள், பாதியில் கிடைத்த பரிசுகள் பெருசாயிற்று.
மெழுகான நேரம் விழியில் விழுந்து,
விரல்தோள் சொட்டும் நினைவுகள் நெஞ்சில்.
சின்ன சிரிப்பின் பின்னணி இசையாக,
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் ஆகிறது.
95
✨💐இன்🌹இசை🌹தென்றல்💐✨Season 19❤️
✨💐IN🌹ISAI🌹THENDRAL💐✨Season 19❤️
இன்னிசை தென்றலின் விதிமுறைகள்.........
(1) கோரிக்கை பன்னுற பாடல் இசையில் வெற்றிப்பெற்ற படத்தின் பாடலாக இறுக்க வேண்டும்..அதாவது வெற்றிப்பெற்ற பாடல் தோல்வி அல்லாத ஒறு அளவுக்கு ஓடிய படமாக இறுக்க வேண்டும்................

(2) இன்னிசை தென்றலில் 8 பாடல்கள் மட்டும்    ஒளிப்பரப்ப படும்.........                       
 ( 3) முதல் 8 பாடல்களில் எந்த பாடல்( 1) விதிமுறைகளின் படி சேரவில்லையோ , அந்த குறிப்பிட்ட பாடல்களை நிராகரிப்பு செய்யப்படும்....      (4) ஞாயிற்றுக்கிழமை
இரவு 11.59pm முதல் திங்கட்கிழமை 00.00am வரை இன்னிசை தென்றல் முடிவுச்செய்யப்படும்....

முக்கிய கவனத்திற்கு
......(1) RJ வின் பாடல் தான் , முதல் பாடல் இன்னிசை தென்றலின் திட்டம் ஆகும்...               
 2) முதலில் இன்னிசை தென்றலில் பதிவுச்செய்த நபருக்கு ஒறு பரிசுப்பாடல் ஒளிப்பரப்பப்படும்....             3) பரிசுப்பாடல் கடைசிப்பாடலாக ஒளிப்பரப்பப்படும்...            4) ஒறு நிமிடத்திற்கு பிறகு பரிசுப்பாடல் thamzhini fmல் ஒளிப்பரப்பப்பட்டு புதிய இன்னிசை தென்றல் திறக்கப்படும்...

Rules of Innisai Thendral.........
(1) The requested song should be selected as a song from a successful film. ...

(2) Only 8 songs will be telecast in Innisai Thendral.........                       
 (3) Any song out of the first 8 songs which does not fall under (1) rules, those particular songs will be rejected.... (4) Sunday
Monday from 11.59pm 00.00am Innisai Theral will be decided....

Main Attention
......(1) RJ's song is , the first song is Innisai Thendral's project...               
 2) One prize song will be aired for the first person to register in Innisai Thendral... 3 ) The prize song will be broadcast as the last song... 4) After one minute the prize song will be broadcast on thamzhini fm and a new breeze will be opened...

By
Thamizhini FM Team
96
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 23 💫
✨💐🌹அது ஒரு அழகிய காலம்🌹💐💫
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 23 💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
97
கண் நம் உணர்ச்சிகளின் பெட்டகம்!!

பெண்ணின் கண்கள் அதிசயங்கள் அல்ல! அதில் பல அர்த்தங்கள் உள்ளது.

கண்  ஒருவரின் தூக்கம், அழுகை,  சிரிப்பு, வேதனை, அன்பு, என்று அனைத்து உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பிம்பம்💖 👀💖.

இதழ் மொழி பேசும் வார்த்தையில் பொய் காணலாம், ஆனால் விழி மொழியில் பொய் அன்றி மெய் காணலாம்.🌹

ஆணின் மனதை கட்டி இழுக்கும் மந்திரம் பெண்ணின் கண்கள்.🫠

என்னவனின் எண்ணத்தை 🫂 🌹 அவன் உறைக்காமல் புரிந்து கொள்ளும் மாயை என் கண்கள்.

நானும் கண்ணியமாகத்தான் இருந்தேன் அவன் கண்களை காணும் வரையில்.

பெண்ணின் விழி மொழிகளை அறியும் ஆண்கள் பாக்கியசாலிகள்💖💖
98
என் விழி
பார்த்து அவன் கதைத்திடும் பொழுதினில் அவன் விழி நோக்கி என் மெய் சிலிர்க்கும்....
 
என் விழியை என்னவன் அவன் நோக்க
அவன் விழியை நான் நோக்க
என் விழி பார்த்து அவன் உயிர் வாழ்கிறது  என்பான்....

பெருங்கோபம் தகிக்கும் என்னவன் விழி சிவந்தால்

பேரன்பு ஊற்றெடுக்கும் அவன் விழி கனிந்தால்......

மழை மேகம் பொழியும் அவன் கருவிழி நனைந்தால்....

இத்தனை ஜாலங்களை இருவிழிகளில் காட்டி
அவன்
என் மை இட்ட கருவிழி கண்களை
கரு மேகம் சூழ் நிலா என்பான்

விழி மூடி  இமைக்கும் இமையை வண்ணத்துப் பூச்சி என்பான் பைத்தியக்காரன்..
ஆம் என்னுடைய பைத்தியக்காரன் அவன்......
99
Aval kangalil poosum kan mai ennai vasiyam seiyum vasiya maigal .
kangal iradum goli gundugal .
kangal ennai erkum iru kandhangal .
kangalil irukum karu vizhi enna padamedukum padakruvi.

Kangal ennai kollum parvayai kondavai.
Kannerai konda kangal aruviyai ponrathu.
kangal mugathil irukum iru oviyam.
kangal aga mothathil kangal en uyirai parikum sakthiyagum .❤️❤️😍😍
100
Inspired from ‘Pesaa madandhaiye.. vizhi pesum chithirame’ mozhi movie


அவன் பற்களை காட்டிச் சிரித்தான்
இவள் கண்களை விரித்துச் சிவந்தாள் - சாலையில்

அவன் பின்னால் இடித்து நின்றான்
இவள் கண்ணால் அனலைத் தெறித்தாள் - பேருந்தில்

அவன் போலாம் வரியா என்றான்
இவள் கண்ணைச் சுருக்கி கடந்துச் சென்றாள் - ஆட்டோ ஸ்டாண்டில்

அவன் குறுக்கே மறித்து நின்றான்
இவள் கண்களால் முறைத்துப் பார்த்தாள் - ரோட் சைட் ரோமியோ

அவன் வந்துவிட்டாயா கண்ணம்மா என்றான்
இவள் கண்களில் காதலைத் ததும்ப விட்டாள் - வீட்டில் கணவன்

அவன் கட்டிக்கொண்டு முத்தமிட்டான்
இவள் கண்களால் அரவணைத்து அன்பைச் சொரிந்தாள் - அவளின் குழந்தை

அன்பு விழிகள் அவளின் அன்பிற்குரியவர்களுக்கு…

அனல் விழிகள் அவளை கேவலம் பெண் என்று நினைப்பவர்களுக்கு…

ஊமைப் பெண்ணின் கண் பேசும் வார்த்தைகள் அவை!!!
Pages: 1 ... 8 9 [10]