1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
« on: September 28, 2025, 09:03:57 am »கடல் போல அமைதியும், மலை போல உறுதியும்
கண்ணீரை மறைத்து, புன்னகையை பரப்பும் குருதியும்.
தூக்கத்தில் கூட என் கனவுகளை காக்கும் காவலன்,
தூய அன்பின் வடிவம், என் வாழ்வின் நாயகன்.
காசு இல்லாமல் கனவுகளை கட்டி கொடுக்கும் கலைஞன்,
கடுமையான வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கும் மென்மைதான் அப்பா.
வழி தெரியாமல் நிற்கும் போது, ஒளி காட்டும் விளக்கே,
வாழ்க்கையின் எல்லா பரிசுகளுக்கும் மேலான பரிசே.
அம்மா போல அன்பு கொடுக்கும்,
அப்பா போல அரண் ஆகும்.
கடல் போல ஆழம், மலை போல உயரம்,
அவனது பாசம் எல்லா பாசங்களுக்கும் மேலானது.
சிறு தவறுகளுக்கு சிரித்து மன்னிக்கும்,
சிறந்த வெற்றிக்கு சிரித்து பாராட்டும்.
தாயின் பாசம், தந்தையின் பொறுப்பு —
இரண்டும் சேர்ந்தது தான் தாயுமானவன்!
