3
« on: December 23, 2024, 07:12:58 am »
அணைவரும் வணக்கம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை புயலுக்கு
06/01/1966 லவ் தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்தார் இவரது பெயர் அருணாசலம் சேகர் திலீப்குமார்
இவர் 1985 ல் இசை பயணத்தை ஆரம்பித்தார் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகில் பணியாற்றினார் சிறுவயதில் தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமந்தார்
11 வயதில் இசை ஞானி இளையராஜாவிடம் கீபோர்டு வாசிக்க சேர்ந்தார் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ரமேஷ் நாயுடு ஜாகீர் உசேன் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியவர்களுடன் உதவியாளராக பணியாற்றினார்
முதலில் விளம்பரங்களுக்கு இசை அமைத்து 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசை அமைத்தார்
1992 ல் மணிரத்னம் மூலம் ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் முதல் படத்திலேயே தமிழ் திரைப்பட உலகில் வெகுவாக பேசப்பட்டது முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார்
2008 ஆம் ஆண்டில் ஸ்லம் டாக் மில்லியனில் என்ற ஆங்கில திரை படத்திற்கு மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது
மற்றும் மொரீசியசு நாட்டில் விருது மலேஷியா விருது லாரன்ஸ் ஆலிவர் விருது தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (6முறை) பிலிம்பேர் விருது (13 முறை) பிலிம்பேர் சவுத் விருது (12 முறை) ஸ்டேன் ஃபோர்டு பல்கலைகழகத்தின் சிறப்பு விருது கோல்டன் குளோப் விருது இன்னும் அதிக விருதுகளையும் வாங்கியுள்ளார்
மற்றும் இந்திய அரசின் 3 ஆம் உயரிய விருதான பத்ம பூசண் விருதும் பெற்றார்
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி ஆங்கிலம் ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்
இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்
மீண்டும் ஒருமுறை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை புயலுக்கு சொல்லி கொள்கிறேன் உங்கள் இசை பயணம் இடைவிடாது நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்
எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்படிக்கு.
உங்கள் கூகுள் காலா