இருண்ட அறையில் புரண்டு படுத்து இருந்த என்னை பத்து மாதம் பேணி காத்து உலகிற்கு அழைத்து வந்தாய் மூச்சு கூட நோகாத படிக்கு முத்தமிட்டு அள்ளி அணைத்தாய் கை பிடித்தவன் கை நழுவி போன போதும் என்னை உந்தன் கைக்குள் போற்றி பாதுகாத்தாய் தவழும் வயதில் தாய் பால் குடுத்து தாவும் வயதில் மடி என்னும் அரியாசனத்தில் அமர வைத்து உச்சு கொட்டி என்னை காத்து நின்றாய் ஊர் உன்னை ஏசிய போதும் என் புதல்வனே என்னுலகம் என வாழ்ந்து வந்தாய் சகலமும் பெற்று வாழ வேண்டிய வயதில் அனைத்தையும் இழந்து நின்றாய் என் கை பிடித்து பலகையில் அம்மா என்னும் மந்திர சொல்லை எழுத பழக்கினாய் காலங்கள் ஓட பினுயுண்டு நான் உனக்கு குழந்தையாய் இருந்தது போய் நீ எனக்கு குழந்தை ஆனாய் நீ என்னை அள்ளி அரவைத்தத்தை போல் சிறிது கூட மிகாமல் உன்னை பார்த்து பார்த்து அள்ளிக்கொண்டேன் நீ என்னை உலகம் என நினைத்து வாழ்ந்தாய் நான் என் சர்வமும் நீயே என வாழ்ந்து வந்தேன் நான் செய்ததில் என்ன குறை கண்டாயோ என்னிடம் சொல்லாமல் பிரிந்து சென்றாய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாய் மீண்டும் இருட்டினில் விட்டு சென்றாய் வழிநடத்தி வாழ்க்கையை சொல்லி குடுத்து சென்றாலும் உன் கை விரலை தேடுகிறேன் மீண்டும் உன் கை பிடிக்க முயலும் நான் தாயின் மாணவனா இல்லை தாயுமானவனா?