Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Bentz

Pages: [1]
2
Hi folks.. ❤️ Enakku Namma GV oda master piece la onnu  "Veyile" movie la irunthu " Uruguthey maruguthey" song romba istam. Athula my fav life line enna nah?

"ஊர விட்டு எங்கையோ வேர் அறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிழி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூர பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்

கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா
உதிரம் முழுதும் உனக்கேதான்னு எழுதி குடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்ன மறந்தால் இறந்தே போவ
" intha line ❤️

Intha song Wtc members ellaarukkum dedicate pannuren


Stay safe folks 👋❤️

By

Sri
Madurai. ❤️

3
​அவள் இன்றிப் போனாலும், அவளின் குணம் நீக்கமில்லை,
அவள் தந்த பாசத்தில் இவனுக்குத் தட்டுப்பாடில்லை.
தாங்கி நிற்கும் இந்தக் கைகள் தந்தைக்கான கைகள் தான்,
ஆனால், செய்யும் கடமையிலோ தாய்மையின் சாயல் தான்.
​இரவு வந்து உறங்க வைப்பான், பகல் எழுந்து பள்ளிக்கு அனுப்புவான்,
கதை சொல்லும் குரல் அவனுடையது, கவலை போக்கும் இதயம் அவளுடையது.
சிறு காயங்கள் கண்டாலும், இவன் முகம் வாடாது அணைக்கும்;

தோளில் ஒரு பாரம், மனதில் நூறு நேசம்,
பள்ளிக்கூடப் பாதையில் இதுவொரு பாச விசேஷம்.
சுமைகளைச் சுமந்தாலும், சிரிக்கிறானே ஒருவன்,
அவன்தான் இக்குழந்தைக்கு அன்னையாய் வந்த தாயுமானவன்! 🫂🫂🫂👨‍👧‍👦

சட்டென்று தோன்றும் பாசத்தால், தாய்மையைத் தனக்குள் நிலைநிறுத்தும்.
​இவன் முதுகில் சுமந்திருப்பது பையை மட்டுமல்ல,
அவன் மனதில் சுமந்திருப்பது பிள்ளையின் எதிர்காலத்தை.
உறவென்னும் பிணைப்பினில் உயிர்க்கும் உன்னதமே நீ,
உயிருள்ள தாயின் மறு உருவமாய் வாழும் தாயுமானவன்!

இப்படிக்கு..!!!

இது கவிதை அல்ல இது எந்தன் உண்மையான எந்தன் கதை.

பால்குடி மாற வயதில் தாயை இளந்து தந்தாய் அறைவனைப்பில் வளர்ந்த மகன்.

By
Sri, Madurai



Pages: [1]