1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 22 💫
« on: June 05, 2025, 01:02:44 pm »
Inspired from ‘Pesaa madandhaiye.. vizhi pesum chithirame’ mozhi movie
அவன் பற்களை காட்டிச் சிரித்தான்
இவள் கண்களை விரித்துச் சிவந்தாள் - சாலையில்
அவன் பின்னால் இடித்து நின்றான்
இவள் கண்ணால் அனலைத் தெறித்தாள் - பேருந்தில்
அவன் போலாம் வரியா என்றான்
இவள் கண்ணைச் சுருக்கி கடந்துச் சென்றாள் - ஆட்டோ ஸ்டாண்டில்
அவன் குறுக்கே மறித்து நின்றான்
இவள் கண்களால் முறைத்துப் பார்த்தாள் - ரோட் சைட் ரோமியோ
அவன் வந்துவிட்டாயா கண்ணம்மா என்றான்
இவள் கண்களில் காதலைத் ததும்ப விட்டாள் - வீட்டில் கணவன்
அவன் கட்டிக்கொண்டு முத்தமிட்டான்
இவள் கண்களால் அரவணைத்து அன்பைச் சொரிந்தாள் - அவளின் குழந்தை
அன்பு விழிகள் அவளின் அன்பிற்குரியவர்களுக்கு…
அனல் விழிகள் அவளை கேவலம் பெண் என்று நினைப்பவர்களுக்கு…
ஊமைப் பெண்ணின் கண் பேசும் வார்த்தைகள் அவை!!!