1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 22 💫
« on: June 07, 2025, 05:04:32 pm »
என் விழி
பார்த்து அவன் கதைத்திடும் பொழுதினில் அவன் விழி நோக்கி என் மெய் சிலிர்க்கும்....
என் விழியை என்னவன் அவன் நோக்க
அவன் விழியை நான் நோக்க
என் விழி பார்த்து அவன் உயிர் வாழ்கிறது என்பான்....
பெருங்கோபம் தகிக்கும் என்னவன் விழி சிவந்தால்
பேரன்பு ஊற்றெடுக்கும் அவன் விழி கனிந்தால்......
மழை மேகம் பொழியும் அவன் கருவிழி நனைந்தால்....
இத்தனை ஜாலங்களை இருவிழிகளில் காட்டி
அவன்
என் மை இட்ட கருவிழி கண்களை
கரு மேகம் சூழ் நிலா என்பான்
விழி மூடி இமைக்கும் இமையை வண்ணத்துப் பூச்சி என்பான் பைத்தியக்காரன்..
ஆம் என்னுடைய பைத்தியக்காரன் அவன்......