1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 22 💫
« on: April 12, 2025, 06:24:13 pm »
கவிதைகளுக்கு ஓர் கவிதை
கவிதை எழுத நான்....! 😉
தூரிகையாய் இமைகள்...🖌️
கண்ணுக்கு அழகு மை என்பதெல்லாம் பொய் என்றுணர்ந்தேன் என்னவளின் கயற்விழிகளை 👀 கண்ட அந்த நொடி.....!
அவள் விழிகளை பார்க்கவே அஞ்சி நடுங்குகிறேன்....
அதன் ஈர்ப்பியியலில் சிக்கி மீள முடியாமல் போகுமோ என தவிக்கும்
என் விழிகளின் வேண்டுதலுக்காக.....
கோபம் தகிக்கும் செஞ்சுடராய் .....!⚡
அன்பு ஊற்றெடுக்கும் தண்மதியாய்.....!🌝
விழுந்தவர் மீள முடியா ஆழியாய்......!🌊
பகைவரும் அஞ்சும் செவ்வேலாய்.....!🔱
தன் மானம் சீண்டும் யாவரையும் சுட்டெரிக்கும் தீச்சுவாலையாய்.....!🔥
காண்பவர் யாவரும் வீழும் மாயவலையாய்....!
அவ்விரு விழிகளில் பல ஜாலம் காட்டும் மாயக்காரி அவள்......🧚