LovelyIndianChat

Tamil Club Chat / WTC => நிழல் உயிர் ஆகிறது => Topic started by: Attitude QueeN on September 22, 2025, 11:13:37 pm

Title: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Attitude QueeN on September 22, 2025, 11:13:37 pm
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
✨💐🌹தாயுமானவன்🌹💐💫
(https://i.postimg.cc/26Rnr9mj/Screenshot-2025-09-22-at-23-10-52-family-star-vijay-devarakonda-Google-Suche.png) (https://postimages.org/)
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 24 💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Vaishnavi on September 23, 2025, 10:09:03 am
நான் மகிழ்ச்சியில் திகைத்திருக்கும் போது என் ஆனந்தத்தையும்..
நான் மனவருத்தம் கொள்ளும் வேளையில் ஆறுதலான வார்த்தைகளையும்....
நான் வெற்றியுரும் போது நீ கொள்ளும் பேரின்பத்தையும்...
நான் தோல்வியுறும் போது நீ கொள்ளும் வேதைனையையும்...
நான் தவறுகள் செய்யும் நேரத்தில் என்னை கண்டித்து திருத்தி...
என் வாழ்வின் அணைத்து தருணங்களிலும்  என்னுடன் இருந்து... என்னை வழிநடத்தி....
என் கோபங்களின் உரிமையையும்
 என் கண்ணீரின் வலிகளையையும்   அனைத்தை உணர்ச்சிகளையும் உணர்ந்து என் தாயைப்போல  அன்பையும் அரவணைப்பையும் கொட்டிய என் சகோதரனே எனக்கு தாயுமானவன்..... 💞🫂
எந்த பெண் பிள்ளைகளை கேட்டாலும் அவர்கள் வாழ்வில்  தந்தையை விட மேலான ஒருவன் இல்லை என்பார்கள். தாயுமானவன் என்ற சொல் தன் தந்தைக்கு  தான் பொருந்தும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் எனது பருவ வயது வரை.  ஆனால் இப்பொழுது அந்த இடத்தை நிரப்பும் என் தாயுமானவன் என் சகோதரனே.
ஆண் மேலான என் நம்பிக்கைக்கு ஆரம்பமும் அவனே....
நினைவுகளை கூற ஆசைக்கொள்ளும்  நாட்களின் முழுமையும் அவனே....
என் குறைகள் ஏதும் அவனிடம் கூற நான் ரகசியம்  காக்க எண்ணியதில்லை. வேஷம் இல்லாமல் பாசம் காட்டும் தாயுமானவன்... என் தேவையற்ற கோப தாபங்களையும் நான் அவனிடம் இடும் சண்டைகளையும்.... மனதில் வைத்து கொள்ளாமல் எனக்காக நிற்கும் என் தாயுமானவன் அவன். 💞💞✨
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Yugi on September 23, 2025, 12:19:42 pm
அன்னையின் கரங்களை உணர்த்தும் அன்பு,
அவனின் நெஞ்சத்தில் புதைந்து கிடக்கும் கனவு.
கையில் சீருடை, மனத்தில் சீரான வாழ்க்கை,
பிள்ளையின் சிறகாய் பறக்கும் அவன் பாதை.
பாடசாலை செல்லும் வழியில் தோழனாய்,
பசி வந்தாலும் முதலில் பிள்ளைக்கு உணவாய்.
தந்தை இல்லை என்றாலும் தாயாய் வளர்க்கும்,
தாயாய் இல்லை என்றாலும் தந்தையாய் காக்கும்.
தாயின் பாசம், தந்தையின் துணிவு,
இவை இரண்டும் ஒன்றாய் கலந்த உருவம்.
சின்ன விரல் பிடித்து உலகம் காண்பவன்,
சிரிப்பில் நிம்மதி தேடும் பரிசாய்ப் போவவன்.
பள்ளி பாடம் மட்டும் அல்ல, வாழ்க்கை பாடமும்,
கற்றுத் தரும் உயர்ந்த ஆசானாம் அவன்.
மக்களின் மத்தியில் சாதாரணனாய் தோன்றினாலும்,
மகனின் கண்களில் ஹீரோவாய் வாழ்பவன்.
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Billa on September 24, 2025, 02:59:46 am
தாயுமானவன்
 
எனக்கு விவரம் தெரியும் முன்பே எனது அன்னைய இழந்தேன்

அதற்கு அப்புறம் என் அம்மாவின் தந்தை அதவாது எனது தாத்தா அவருக்கு தன் இந்த கவிதை

என் அன்பு தாத்தா இல்லை என் அம்மா
உந்தன் பாசம் எல்லையற்றது தாத்தா
உந்தன் அன்பு அழகானது தாத்தா
உந்தன் அறிவு எந்தன் கண்கள் தாத்தா
உந்தன் மிசையை முருக்குவது எந்தன் ஆனந்தம் தாத்தா
உந்தன் கைகள் எந்தன் வழிகாட்டி தாத்தா

உந்தன் முகம் பார்த்து வாழ்ந்த நான் செய்த அனைத்து தவறான செயல்களையும் மன்னித்து விடு தாத்தா 😫

இப்படிக்கு உன் அன்பு பேரன் ( பிள்ளை ) சுபாஷ்
என் வாழ்க்கை அழகாக மாற்றியதுக்கு நன்றி தாத்தா ( அம்மா )


🙂 By Subash Trichy[
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: MANMADHAN on September 26, 2025, 09:30:18 pm
இருண்ட அறையில் புரண்டு படுத்து இருந்த என்னை பத்து மாதம் பேணி காத்து உலகிற்கு அழைத்து வந்தாய் மூச்சு கூட நோகாத படிக்கு முத்தமிட்டு அள்ளி அணைத்தாய் கை பிடித்தவன் கை நழுவி போன போதும் என்னை உந்தன் கைக்குள் போற்றி பாதுகாத்தாய் தவழும் வயதில் தாய் பால் குடுத்து தாவும் வயதில் மடி என்னும் அரியாசனத்தில் அமர வைத்து உச்சு கொட்டி என்னை காத்து நின்றாய் ஊர் உன்னை ஏசிய போதும் என் புதல்வனே என்னுலகம் என வாழ்ந்து வந்தாய் சகலமும் பெற்று வாழ வேண்டிய வயதில் அனைத்தையும் இழந்து நின்றாய் என் கை பிடித்து பலகையில் அம்மா என்னும் மந்திர சொல்லை எழுத பழக்கினாய் காலங்கள் ஓட பினுயுண்டு நான் உனக்கு குழந்தையாய் இருந்தது போய் நீ எனக்கு குழந்தை ஆனாய் நீ என்னை அள்ளி அரவைத்தத்தை போல்  சிறிது கூட மிகாமல் உன்னை பார்த்து பார்த்து அள்ளிக்கொண்டேன் நீ என்னை உலகம் என நினைத்து வாழ்ந்தாய் நான் என் சர்வமும் நீயே என வாழ்ந்து வந்தேன் நான் செய்ததில் என்ன குறை கண்டாயோ என்னிடம் சொல்லாமல் பிரிந்து சென்றாய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாய் மீண்டும் இருட்டினில் விட்டு சென்றாய் வழிநடத்தி வாழ்க்கையை சொல்லி குடுத்து  சென்றாலும் உன் கை விரலை தேடுகிறேன் மீண்டும் உன் கை பிடிக்க முயலும் நான் தாயின் மாணவனா இல்லை தாயுமானவனா?
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Megna on September 27, 2025, 08:57:03 am
அன்பின் அருவியாய் நின்று தாயாக விளங்கியவன்,
அருள் மொழி ஒலியால் உயிர்க்கு உயிரூட்டியவன்.

சைவ மார்க்க தீபமாய் சுடரொளி பரப்பியவன்,
சத்தியத்தின் சுவடுகளைச் சிந்தையில் பதித்தியவன்.

கடவுளை உள்ளத்தில் காணும் கனிவு சொல்லியவன்,
கபடமற்ற வாழ்வையே கருணையுடன் புகழ்ந்தவன்.

பொய்யின்றித் தூய்மையான புது சிந்தை ஊட்டியவன்,
பக்தியின் பாதையில் பலர் மனதை வழிநடத்தியவன்.

ஏகத்துவம் உரைத்தவனாய் எளிமை கொண்ட துறவி,
எல்லா உயிர்க்கும் ஈகை சொன்ன இயற்கைத் தமிழ்த்துறவி.

மெய்யின் தேடல் வாழ்வின் நேசம் என்றும் பாடியவன்,
மனிதனை மனிதராய் மதிக்க வேண்டும் கற்றுத்தந்தவன்.

தாயாய் தழுவும் கருணையால் "தாயுமானவன்",
தமிழின் தெய்வக் கவிஞனாய் என்றும் வாழ்ந்தவன்.
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Bentz on September 28, 2025, 12:35:52 am
​அவள் இன்றிப் போனாலும், அவளின் குணம் நீக்கமில்லை,
அவள் தந்த பாசத்தில் இவனுக்குத் தட்டுப்பாடில்லை.
தாங்கி நிற்கும் இந்தக் கைகள் தந்தைக்கான கைகள் தான்,
ஆனால், செய்யும் கடமையிலோ தாய்மையின் சாயல் தான்.
​இரவு வந்து உறங்க வைப்பான், பகல் எழுந்து பள்ளிக்கு அனுப்புவான்,
கதை சொல்லும் குரல் அவனுடையது, கவலை போக்கும் இதயம் அவளுடையது.
சிறு காயங்கள் கண்டாலும், இவன் முகம் வாடாது அணைக்கும்;

தோளில் ஒரு பாரம், மனதில் நூறு நேசம்,
பள்ளிக்கூடப் பாதையில் இதுவொரு பாச விசேஷம்.
சுமைகளைச் சுமந்தாலும், சிரிக்கிறானே ஒருவன்,
அவன்தான் இக்குழந்தைக்கு அன்னையாய் வந்த தாயுமானவன்! 🫂🫂🫂👨‍👧‍👦

சட்டென்று தோன்றும் பாசத்தால், தாய்மையைத் தனக்குள் நிலைநிறுத்தும்.
​இவன் முதுகில் சுமந்திருப்பது பையை மட்டுமல்ல,
அவன் மனதில் சுமந்திருப்பது பிள்ளையின் எதிர்காலத்தை.
உறவென்னும் பிணைப்பினில் உயிர்க்கும் உன்னதமே நீ,
உயிருள்ள தாயின் மறு உருவமாய் வாழும் தாயுமானவன்!

இப்படிக்கு..!!!

இது கவிதை அல்ல இது எந்தன் உண்மையான எந்தன் கதை.

பால்குடி மாற வயதில் தாயை இளந்து தந்தாய் அறைவனைப்பில் வளர்ந்த மகன்.

By
Sri, Madurai


Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: Maari on September 28, 2025, 02:04:14 am
🌸✨
“இந்தக் கவிதை
ஒவ்வொரு தாயுமானவனாய் வாழும்
ஒவ்வொரு ஆண்மகனுக்கும்
மற்றும்
 என் மகள் ரப்பன்சல் - க்கும் சமர்ப்பணம்”
✨🌸
விடியல் இல்லா பொழுதைப் போல இருந்த பலர் வாழ்வில்
ஒளியைப் போல் “அன்னை” எனும் உறவு இல்லாமல் தவித்த
உள்ளங்களுக்கு “தந்தையாய்” வந்த அன்னையே …

உனக்கொரு கவிதை எழுதவா..!
எழுத்துகளே அஞ்சுகிறதே..!
உன்னைப் போற்றி எழுத தமிழ் சொற்கள் போதுமா என…

காலம்கூட கண்ணீர் விட்டது
நீ படும் வேதனையை கண்டு…

விழிநீர் நீ சிந்தியது இல்லை
எம்முடைய சந்தோச புன்னகை சிதைந்திடும் என…

உன் நெஞ்சில் வழியும் வேர்வைத் துளிகள் பேசும் உன் வேதனை

இறைவா, உனக்கு கருணை இல்லையா?
ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும்
ஒரு சிறு எறும்பு போல
ஓர் ஆண் மகன் சிதைகிறான்…

உனக்கு கருணை இருந்தால்
நீ ஏன் கல்லாய் இருக்கிறாய் …!

கார்மேகம் துவண்டு போய் கண்ணீர் சிந்துகிறது
ஒரு பிஞ்சு மலரை ஆண் மகன்
தாய்மை இன்றி வளர்ப்பதை பார்த்து…

இன்னும் எண்ணற்ற சோகம் உள்ளது ஒவ்வொரு ஆண்மகன் உள்ளே…

கடலில் விழுந்த கண்ணீர் துளி போல,
காணாமல் போகிறது அவன் கொண்ட பாசத்தின் முன்...

🌸✨
“இந்தக் கவிதை
ஒவ்வொரு தாயுமானவனாய் வாழும்
ஒவ்வொரு ஆண்மகனுக்கும்
மற்றும்
 என் மகள் ரப்பன்சல் - க்கும் சமர்ப்பணம்”
✨🌸

—KM.மாரி
Title: Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
Post by: WTC MAMAKUTTY on September 28, 2025, 09:03:57 am
கடல் போல அமைதியும், மலை போல உறுதியும்
கண்ணீரை மறைத்து, புன்னகையை பரப்பும் குருதியும்.

தூக்கத்தில் கூட என் கனவுகளை காக்கும் காவலன்,
தூய அன்பின் வடிவம், என் வாழ்வின் நாயகன்.

காசு இல்லாமல் கனவுகளை கட்டி கொடுக்கும் கலைஞன்,
கடுமையான வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கும் மென்மைதான் அப்பா.

வழி தெரியாமல் நிற்கும் போது, ஒளி காட்டும் விளக்கே, 
வாழ்க்கையின் எல்லா பரிசுகளுக்கும் மேலான பரிசே.

அம்மா போல அன்பு கொடுக்கும்,
அப்பா போல அரண் ஆகும்.

கடல் போல ஆழம், மலை போல உயரம்,
அவனது பாசம் எல்லா பாசங்களுக்கும் மேலானது. 

சிறு தவறுகளுக்கு சிரித்து மன்னிக்கும், 
சிறந்த வெற்றிக்கு சிரித்து பாராட்டும். 

தாயின் பாசம், தந்தையின் பொறுப்பு — 
இரண்டும் சேர்ந்தது தான் தாயுமானவன்!