2
« on: April 04, 2026, 03:54:16 pm »
மாலை வெயில் அவள் மேல் பட்டது,
மலையே அவள் அழகில் மயங்கி நின்றது.
பொன்னிற ஒளியில் அவள் கூந்தல் மிளிர்ந்தது,
பூவும் வெட்கி தலை குனிந்து நின்றது.
சூரியன் கதிர்கள் அவள் கன்னம் தொட்டது,
சுடர் விட்டு அவள் முகம் இன்னும் மலர்ந்தது. ☀️
மேகங்கள் அவளை சுற்றி வளைந்தது,
மேனி முழுதும் வெண்ணிலா பூசிக்கொண்டது. ☁️
காற்று அவள் இதழில் முத்தமிட்டது,
கடலும் அவள் கண்களில் ஆழம் தேடியது.
நிலவும் அவள் நகைப்பை கண்டு வெட்கியது,
நட்சத்திரங்கள் அவள் விழியில் ஒளி தேடியது. ✨
வானவில்லும் அவள் நிறம் கண்டு மலர்ந்தது,
வையகமே அவள் அழகில் தொலைந்தது
மலையுச்சியில் அவளை பார்த்திருந்தேன்,
மாலை வானமே அவளுக்காய் சிவந்தது என்றேன். ❤️